ஞானமும் ஒளியும் எமக்கருளென்றே இறைவனை வேண்டிடுவோம் ஆனனற்கலைகள் அனுதினம் வளர இறைவா உனைப் பணிந்தோம்
அறிவினில் நிறைந்த குருகுலம் அதனின் அடிகளைப் பின் தொடர்வோம் நறுமலர் பருகும் மதுகரம் நிகரும் சிறுவர்கள் உளம் ஒளிர எமதறிவோங்கி இருமையும் வாழ இறைவா உனைப் பணிந்தோம்
(ஞானமும் ஒளியும்)
கலைபல வளரும் எமதுயர் அன்னை மருதமுனை சிறக்க அல் மனார் என்னும் - உயர் கலைபீடம் அரும் பணியாற்றிடவே அதனுயர் அதிபர் துணைதரும் ஆசான் அவர் வழி நாம் நடப்போம் இறைவா உனைப் பணிந்தோம்
(ஞானமும் ஒளியும்)
கருவினில் சுமந்து
அறிவொளி ஊட்டும்
தாய் தந்தை பேணிடுவோம்
இனமத பேத இதயங்கள் இல்லா
உலகினை நாம் படைப்போம்
அன்பெனும் மழையில்
அனைவரும் நனைந்து
எழில் நிறை பெற்றிடுவோம் இறைவா உனைப் பணிந்தோம் (II)
(ஞானமும் ஒளியும்)





